2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியுமா?

Freelancer   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன இன்று தெரிவித்தார்.

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இப்போதைக்கு அதை செய்ய வழியில்லை. ஏனென்றால், நாங்கள் இன்னும் IMF நிபந்தனைகளுடன் இருக்கிறோம். 

அரசாங்கத்திற்கு வருமானம் இருக்க வேண்டும், சடுதியாக விலையை குறைப்பது கடினம். நாங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டியிருக்கிறது. 

அதனால்தான் இந்திய பிரதமர் இங்கு வரும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாகன ஒப்பந்தங்களை நோக்கியே செல்லவுள்ளோம். அப்படி சென்றுதான் எங்களால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். 

எரிபொருளுடனும் எங்களுக்கு ஒரு சமநிலைப்படுத்தல் செய்ய வேண்டியிருக்கிறது. இதை IMF-ம் அறிந்திருக்கிறது.  அந்த இடத்திற்கு உடனடியாக செல்ல முடியாது. ஆனாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் பலமுறை எரிபொருள் விலையை குறைத்திருக்கிறோம். இந்த முறை 10 ரூபாயால் குறைத்திருந்தாலும், இதற்கு முன்பும் அரசாங்கம் பல்வேறு அளவுகளில் விலையை குறைத்துள்ளது." என்றார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .