2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

எரிபொருட்களின் விலையில் மாற்றம்

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல்  விலைகளில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தமது எரிபொருளின் விலைகளை மாற்றமின்றி தொடர தீர்மானித்துள்ளன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X