Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை
Simrith / 2025 மார்ச் 17 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மேயர் வேட்பாளர் அல்ல என கட்சியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்த நிரோஷன், மூன்று முக்கிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
எரான் விக்ரமரத்னவே கொழும்பு மேயர் வேட்பாளர் என்று கூறும் எஸ்.ஜே.பி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் கேள்விகளுக்கு பதிலளித்த நிரோஷன், அத்தகைய முடிவு எதுவும் இல்லை என்றார்.
"எரான் போட்டியிடக்கூடும் என்று ஹிருணிகா நினைத்திருக்கலாம். ஆனால் எரான் இந்தப் பதவிக்குப் போட்டியிட மாட்டார். அவருக்கு எஸ்.ஜே.பி.யுடன் இணைக்கப்பட்ட மிக முக்கியமான பொறுப்புகள் உள்ளன," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று நிரோஷன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago