2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

எம்.பி வாகனத்தில் மோதி பெண் மரணம்

Janu   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், பொலவத்தை சந்தியில் உள்ள  பாதசாரி கடவையில் நடந்து சென்ற யாசக  பெண் ஒருவர் மீது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர் 65 - 70 க்கு இடையிப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திங்கட்கிழமை (8) அன்று  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்து தொடர்பில் கஜேந்திர குமாரின்  சாரதியான ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .