Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 09 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் பலவீனங்கள்,இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதானஎதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுவருவதாகவும்,தற்போது பல்வேறு பொய்களை உருவாக்கி அந்த பொய்களை திரும்ப திரும்ப கூறி ஐக்கியமக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக ஊடகங்கள் ஊடாகபொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் மூலம் மக்கள் கோரிய வரப்பிரசாதங்கள் சலுகைகள் இல்லாத அரசியல் கட்டமைப்பாகஇருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் இந்தக் கோரிக்கைகளை புறக்கணித்துஎதிர்க்கட்சியின் உறுப்பினர்களை பணத்திற்கு விலைபேசும் சதியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்தெரிவித்தார்.
எனவே மக்கள் நிராகரித்த அந்த இலஞ்ச அரசியல் மற்றும் ஊத்த,அசிங்க அரசியல் செய்யும் தரப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ கூட்டு சேராது என எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களால் தீர்மானிக்கப்படும் மக்கள் ஆணையொன்றின் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்வோமேதவிர குப்பை குவியல்களுடன் இணைந்து கொண்டு செயல்படுவதற்கு எந்த வித தயாரும் இல்லைஎனவும், இந்நேரத்தில் நாட்டுக்கான ஒரே பதில் ஐக்கிய மக்கள் சக்தியே எனவும் எதிர்க்கட்சித் தலைவர்தெரிவித்தார்.
எனவே,ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள்எனவும்,இவ்வாறான கலந்துரையாடல்கள் கட்சிக்குள்ளேயோ அல்லது கட்சிக்கு வெளியேயோஇடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக பரவி வரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago