Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஜூலை 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது,
பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை (புத்த மதம் துறவி) கொடுத்துள்ளோம், யுத்தத்தை (போர்) கொடுக்கவில்லை. இந்தியா எப்போது அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது. எனது ஆஸ்திரிய பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. 41 ஆண்டுகால காத்திருப்பு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியால் நிறைவுக்கு வந்துள்ளது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் 75 ஆண்டுகால நட்பை கொண்டாடுகிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
34 minute ago
4 hours ago