2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

உப்பு விலை அதிகரிப்பு

Editorial   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம், வியாழக்கிழமை (6) முதல் உப்பு விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட ஒரு கிலோ உப்பு கட்டியின் விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்துள்ளார். உப்பு விலை அதிகரிப்பானது தற்காலிக தீர்மானம் என்று தெரிவித்த அவர் மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு உற்பத்தி கிடைத்தவுடன் உப்பு விலை குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதனாலேயே உப்பின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X