2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் 43 பேர் பாதிப்பு

Editorial   / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் ஊழியர்களுக்கு புதன்கிழமை (04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

25 பெண்களும் 18 ஆண்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில்  இருந்து காலை உணவு வழங்கப்பட்டது, அதை சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X