Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 25, புதன்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகைக் காலத்தையொட்டி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் நேற்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நேற்றுக் காலை யாழ்ப்பாணம் நல்லூர், உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் களப் பரிசோதனையில் சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த 9 குழுக்கள் ஈடுபட்டிருந்தன.
இவர்களால் நேற்று 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டன. இவற்றில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இந்தப் பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
3 hours ago