2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

உண்டியல், ஹவாலா முறைகள் சட்டவிரோதமானவையல்ல

Simrith   / 2025 ஜனவரி 08 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எவ்வாறாயினும் இலங்கையில் எந்த வகையிலும் அம் முறைமைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

மேலும், இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஜூன் 2024 முதல் மே 2025 வரையான 12 மாதங்களுக்குள் பதிவு செய்ய முன்மொழியப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியிடம் COPF கோரியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.

உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் தொடர்பான பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X