Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2024 நவம்பர் 25 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரியந்த பெர்ணாந்து ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஹன்சனி அழககோன் தாக்கல் செய்த மனுவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் திருமதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் கல்விக்காலம், தொடர்பிலான 39/2023 சுற்றறிக்கையில் உயர்தரப் படிப்புக் காலம் 107 கல்வி நாட்களை நிறைவு செய்ய வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரரான மாணவி, இந்தக் கல்விக் காலத்துக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago