2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஈரப்பலாகாயால் தாக்கியதில் பெண் பலி

Editorial   / 2024 ஜூலை 22 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிப்பட்ட தகராறு காரணமாக 79 வயதுடைய பெண் ஒருவரின் தலையில் ஈரப்பலாகாயால் தாக்கி கொலை செய்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

மல்சிரபுரவை சுற்றியுள்ள கிராமத்தில் வசித்து   நான்கு பிள்ளைகளின் தாயான எச்.சி.அசிலின் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பான நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஈரப்பலாகாயை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேகநபர் பெண்ணின் கையில் இருந்த ஈரப்பலாகாயை  பிடுங்கி, அப்பெண்ணின் தலையில் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது பெண் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X