Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 23 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நெருக்கடி நிலையில் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை இன்மையும் பொறுப்புக்கூறல் இன்மையும் மேலும் அதிகரித்துள்ளன
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையின் பின்னணியில், 2022ம் ஆண்டில் அரசாங்கம் முன்மொழிந்த கொள்கைகளைப் பின்பற்றியுள்ளதா என்பதை மதிப்பிட வெரிட்டே ரிசேர்ச் முடிவு செய்தது. 1) சுகாதாரம் மற்றும் மருத்துவம் 2) உணவு மற்றும் விவசாயம் 3) எரிபொருள் மற்றும் ஆற்றல் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 15 அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் முன்மொழிவுகளை அரசாங்கம் பின்பற்றியுள்ளதா என்பதை வெரிட்டே மதிப்பிட்டது.
இலங்கையின் தனிநபர் வருமான வரிக் கொள்கையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்கள் பொதுமக்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. வரி செலுத்துனர்களின் பணத்தை அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்தாது என்ற அவநம்பிக்கையின் அடிப்படையில் இது ஏற்பட்டது. முன்மொழியப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிடமறுத்ததில் இந்த அவநம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. அவ்வாறான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்காது இருப்பது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அரச நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது ஆகியவைக்கு வழிவகுக்கும்.
கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது.
பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களினது முக்கிய கடமை எனவும் ,அனைத்து அமைச்சுக்களிலும் அரச நிறுவனங்களிலும் திறன் வாய்ந்த பதிலளிக்கும் அமைப்பை உருவாக்குவது அவசியம் எனவும் செப்டெம்பர் 2022ல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்திருந்தார். இருப்பினும், வெரிட்டேயின் மதிப்பீடுகள், அரசாங்க நிறுவனங்கள் தாம் பெறும் தகவல் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கு பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை என்பதைக் கண்டறிந்தன.
15 முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு 9 முகவரகங்கள் பொறுப்பாக உள்ளன. இந்த மதிப்பீடு பின்வருபவற்றை வெளிப்படுத்தியுள்ளது:
● இந்த முன்மொழிவுகளின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை எந்தவொரு முகவரகமும் தாமாக முன்வந்து ஆன்லைனில் வெளியிடவில்லை. (2016ம் ஆண்டின் 12ம் இல. தகவல்கள் உரிமைச் சட்டத்தின் 8(2)(b)(v) பிரிவின் கீழ் தாமாக முன்வந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களின் கீழ் கோரப்பட்ட தகவல்கள் இருந்தாலும் கூட)
தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைகளுக்கு 3 முகவரகங்கள் மாத்திரமே பதிலளித்திருந்தன.
முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு ஒரு முகவரகம் வழங்கிய தகவல் மாத்திரமே போதுமானதாக இருந்தது.
யார் பொறுப்பு ? பொறுப்புக் கூறல்இன்மை ஒரு முக்கிய பிரச்சினை
அமைச்சரவைத் தீர்மானம் அல்லது முன்மொழிவில், நடைமுறைப்படுத்தும் முகவரகமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட பல அமைச்சுக்களும் திணைக்களங்களும் முன்மொழிவுகள் தங்கள் மேற்பார்வையின் கீழ் வருகின்றனவா என்பதில் தெளிவில்லாமல் இருப்பதை மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைகள் பல தடவைகள் முகவரகங்களுக்கும் தகவல் அலுவலர்களுக்கும் இடையே மாற்றி மாற்றி அனுப்பப்பட்டன.
இலங்கையில் நெருக்கடியின் போதும் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் இன்மை முக்கியமானதும் தொடர்ச்சியான ஒரு அம்சமாகவும் உள்ளது. அரசாங்கத்திடமிருந்து கூடுதலான பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என்பதே இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களின் முக்கியகோரிக்கைகளாக இருந்தன.
நெருக்கடி, பொதுமக்களின் அல்லல்கள், பொதுமக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றின் போதும் அரசாங்கம் மாறுவதற்கு விருப்பமின்றி இருப்பது நிலையான பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு இருட்டாக இருப்பதைக் காட்டுகிறது.
2016ம் ஆண்டின் 12ம் இல. தகவலுக்கான உரிமைச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடம் கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த மதிப்பீடு முதன்மையாகத் தங்கியுள்ளது. கண்காணிக்கப்பட்ட 15 முன்மொழிவுகள், அதற்குப் பொறுப்பான முகவரகங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களைப் பார்வையிட https://publicfinance.lk/ta செல்லவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
1 hours ago