2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இலங்கை பெண்: விமானத்திலேயே மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, சேவையை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே  உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

  மொரட்டுவ, கோரல்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண் எனவும்  திருமணமாகாதவர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.   

 

             திங்கட்கிழமை (23)  காலை 01.17 மணியளவில், அவர் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், விமானம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்தது.

                பின்னர் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .