2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுமா?

Editorial   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார  விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரித்தபோதே  நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்துத் தெளிவாகவுள்ளார்.

நீதிமன்ற கொலையின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை.

தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான  நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

நீதிமன்றம் தொடர்ந்தும் மரணதண்டனை தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும் இலங்கை 1976ஆம் ஆண்டுமுதல் மரணதண்டனையை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்துள்ளது என்றார். (S.R)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X