Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு 'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
2019 பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் தொற்று, சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.
எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திசாநாயக்கவால் இன்றைய தினம் 'இலங்கை மித்ர விபூஷண' என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.
இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.
அத்துடன் இந்திய - இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது.
இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என இந்திய பிரதமர் மோடி இதன்போது மேலும் குறிப்பிட்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago