2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

இலங்கை விஜயம் குறித்து மோடி வெளியிட்ட தகவல்

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள  இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என  தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X