2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

இலங்கை-இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கண்டனம்

Simrith   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திர மோடியின் அண்டை நாட்டிற்கான பயணத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (MDMK) பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.

மோடி இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வைகோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உட்பட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

"உள்நாட்டுப் போரின் போது 1.37 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களைக் கொன்றதும், ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததும் இலங்கைப் பாதுகாப்புப் படைகள்தான். பலரைக் கொடூரமாகக் கொன்றதன் மூலம் விடுதலை இயக்கத்தையும் அவர்கள் அடக்கினர்" என்று வைகோ கூறினார்.

"இனப்படுகொலையை விசாரிக்க ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை இராணுவத்தை நிறுத்த தமிழ் சமூகம் விரும்பிய நேரத்தில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X