2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இரு லொறி மோதியதில் பெண் ஒருவர் பலி

Janu   / 2023 நவம்பர் 28 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ - அதுருகிரிய நெடுஞ்சாலைக்கு இடையில் 03 ஆம்   மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) பதிவாகியுள்ளது.  

கடுவெலயிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறியொன்று  அதுருகிரிய  03 3ஆம்  மைல்கல்லுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்பகுதியில் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  பின்னால் வந்த லொறியின் சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்,  குறிப்பிட்ட பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  உயிரிழந்துள்ளார். அம்பிலிபிட்டிய, செவனகல, கோவுலரார பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் எம்பிலிப்பிட்டியை நோக்கிச் செல்வதற்கு பஸ்ஸுக்காக, கடுவெல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் காத்திருந்த போது  லொறி வந்ததால் அதில் ஏறி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .