2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை  விதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள  32 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

நேற்று நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 முன்னதாக கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து நேற்று இரண்டாவது நாளாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X