Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 24 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் இராணுவ பரசூட் வீரராக தகுதியை பெற்றார்.
இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன், உஹான விமானப்படைத் தள ஓடுபாதையில் எம்ஐ-17 ஹெலிகாப்டரில் விமானத்தில் 2024 ஜனவரி 22 ம் திகதியன்று சென்றார்.
தளபதி உஹான விமானப்படை தளத்தின் துளி மண்டலத்தின் மீது பராசூட் குதித்து, மரியாதைக்குரிய வான்வழி வீரர்களின் குடும்பத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இந்த சாதனையானது இலங்கை இராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தடயமாக லெப்டினன் ஜெனரல் இராணுவ பரசூட் வீரராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இராணுவத் தளபதியாக பதவிவகிக்கின்றமை சிறப்பம்சமாகும். மேலும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ( ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ) இராணுவ பரசூட் வீரராக வெற்றிகரமாக தகுதி பெற்ற சிரேஷ்ட மிக உயர்ந்த இராணுவ வீரர் என்ற குறிப்பிடத்தக்க சிறப்பை அடைந்துள்ளார்.
ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசீஎ டி சொய்சா (யூஎஸ்பீ எச்டிஎம்சீஎல்எஸ்சீ ) தளபதியுடன் இணைந்துக் கொண்டார்.
தகவல் : கெப்டன் வா சுதர்ஸ்சன்
இராணுவ ஊடக பணிப்பகம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
7 hours ago