2025 மார்ச் 26, புதன்கிழமை

இரவு விடுதி விவகாரம்: யோஷிதவுக்கு தொடர்பில்லை

S.Renuka   / 2025 மார்ச் 24 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ, வார இறுதியில் கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (21) இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்‌ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று பாதுகாப்பு காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் பவுன்சர்களுக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு அத்தகைய பேட்ஜ் இல்லாததால், பாதுகாப்புக் காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்‌ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .