2025 ஜனவரி 15, புதன்கிழமை

இரத்தின கற்களுடன் சீன தந்தை, மகள் கைது

Editorial   / 2025 ஜனவரி 14 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.பி.ஜி.கபில 

ஒருகோடி 74 இலட்சத்து 50 ஆயிரத்து 800 ரூபாய்   மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்றதற்காக, சீன பிரஜையும் அவருடைய மகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, திங்கட்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டள்னர்.

தங்களுடைய  உள்ளாடைகளில் இரத்தினக் கற்களை மறைத்து  சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்

சீனாவைச் சேர்ந்த 45 வயதான தந்தைக்கு அவருடைய 21 வயதான மகளுக்கு 21 வயது. இந்நாட்டில் வசிப்பதற்கான குடியிருப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனன​ர்.

அவர்கள் இருவரும் திங்கட்கிழமை (13) இரவு 7:30 மணியளவில் சீனாவின் சோங்கிங் நகருக்குபுறப்படும் சோங்கிங் ஏர்லைன்ஸ் விமானம் OQ-2394 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவர்களின் உடல்களை ஸ்கேன் செய்தபோது, ​​அவர்கள் மறைத்து வைத்திருந்த இரத்தினக் கற்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரத்தினங்களில் சந்திரகாந்தி, கோமேத, அரனுல், வைரோடி மற்றும் பச்ச வகைகளைச் சேர்ந்த 689.5 கிராம் ரத்தினங்கள் இருந்தன.

​அதன்பின்னர், அவ்விருவரிடமும், செவ்வாய்க்கிழமை (14) மதியம் வரையிலும் சுங்க விசாரணை நடத்தப்பட்டது, அதன்பின்னர் ரத்தினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் என்றடிப்படையில், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X