2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இரண்டு நாள் காய்ச்சலால் 5 மாத குழந்தை உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள்கள் காய்ச்சல் காரணமாக 5 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தரின் தவிசா என்ற 5 மாத பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மாலை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .