2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

இரண்டு குழந்தைகளுடன் கடலில் மூழ்கிய நபர்

Freelancer   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்;கண்டி கடலில் நீராடச் சென்ற தந்தை மகன் மற்றும் அவரது உறவினரான சிறுவன் உட்பட 3 பேர் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (25) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். சங்கமன்;கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், அவருடைய 15 வயதுடைய டினுஜன், மற்றும் நந்தராஜ் சகோதரியின் மகனான 17 வயதுடைய கிரிஷோர் ஆகிய மூவரும் இவ்வாறு கடலில் கூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்து பிரதேசத்தைச் சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் அவரது மகன் சகோதிரியின் மகன் ஆகிய மூவரும் சம்வப தினமான நேற்று மாலையில் நத்தார் பண்டிகையையிட்டு கடலில் நீராடச் சென்ற நிலையில் மச்சான் மார் இருவரும் கடலில் நீராடிய நிலையில் கடல் அலையால் இழுத்து செல்லப்படதையடுத்து அவர்களை காப்பாற்ற கடலில் குதித்த தந்தையையும் கடல் அலை இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த நிலையில் காணாமல் போனவர்களை மீனவர்கள் உறவினர்கள் பொலிசாருடன் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் R.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X