Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை
Simrith / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள எஞ்சியோகிராம் இயந்திரம் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக சேவையில்லாமலிருப்பதால், இதயநோயாளிகள் மிகவும் ஆபத்தான நோயறிதல் நடைமுறைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இப் பிரச்சினை காரணமாக அத்தியாவசியப் பரிசோதனை தேவைப்படுகிறன்ற நோயாளிகள், அடுத்த ஆண்டு பரிசோதனையை மேற்கொள்ளும் படியாக நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
ஏற்கனவே திகதிகளைப் பெற்றவர்கள், செயலிழப்பு காரணமாக பரிசோதனையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சேவையைத் தனியார் வைத்தியசாலையில் அணுக அதிக செலவுகள் தேவைப்படுவதால், நோயாளிகளின் குடும்பத்தினர், இயந்திரத்தை விரைவாக சரி செய்ய வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையை அணுகுவதுடன், அங்கு செயற்படும் எஞ்சியோகிராம் இயந்திரம் இன்மையால் பெருமளவிலான நபர்கள் ஆபத்தில் உள்ளனர்.
குழாய் எரிந்ததால் இயந்திரம் செயல்படாமல் நின்றதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் எஸ்டியுஎம் ரங்கா தெரிவித்தார்.
மாற்று பாகம் அமைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது, விரைவில் பழுது நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago