Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூலை 12 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளாந்த பால் தேவையின் 40 % தற்பொழுது உற்பத்தி செய்யப்படுவதாகவும், 60 % பால் உற்பத்தி குறைவாகக் காணப்படுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அதற்கமைய, பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கோபா குழுவின் தலைவர் வினவியத்துடன், ஒரு நாளைக்கு 100 லீற்றர் உற்பத்தி செய்யக்கூடிய 15,000 பண்ணைகளை உருவாக்குவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதில் சுமார் 2000 பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இம்புலத்தண்ட ஆடு இனப்பெருக்க நிலையத்திலுள்ள இறக்குமதி செய்யப்பட 100 ஆடுகளுள் தனிமைப்படுத்தல் காலத்தில் 11 ஆடுகள் உள்ளடங்கலாக 38 ஆடுகள் இறந்துள்ளன. ஆடுகளை இறக்குமதி செய்வதற்கான கொள்வனவு சபையின் அனுமதி 2017 இல் கிடைக்கப்பெற்றுள்ள போதும் இந்த ஆடுகள் 2019 இல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அந்நியச்செலாவணி வித்தியாசத்தினால் 2,311,760 ரூபாய் மேலதிகமாக செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
52 minute ago