2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் மரணம்

Janu   / 2024 ஜூன் 25 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றுள்ளது .

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். 

காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில்,இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். 

அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அதில் கடற்படை வீரர் பலத்த காயமடைந்துள்ளார் .

அதனைடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றியுள்ளத்துடன் அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது .

காயமடைந்த கடற்படை வீரரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் .

இந்த நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .