2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

”இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை”

Simrith   / 2024 நவம்பர் 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமாக இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கலந்து கொண்டார்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணாநாயக்க, புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். 

இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் அது பற்றிய பிரச்சினை இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்துவதிலேயே தனது கவனத்தை செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஒரு சிலரின் நலனுக்காக கட்சி பாதிக்கப்பட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .