2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

இடைவேளையில் வந்த கொம்பன் ; வெளியேறிய மாணவர்கள்

Janu   / 2024 நவம்பர் 05 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலென்பிந்துனுவெ​வ கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பன்டுலுகம மகா வித்தியாலயத்திற்குள் செவ்வாய்க்கிழமை (05) 11.30 மணியளவில் கொம்பன் யானை ஒன்று வந்ததால் பாடசாலைக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வந்த கொம்பன் யானையை பார்த்ததும்  மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு பாடசாலையை விட்டு வெளியே வந்துள்ளதுடன் பின்னர்  அக்கம் பக்கத்தினர் மற்றும் மாணவர்களின்   பெற்றோர்கள் வந்து யானையை விரட்டியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், யானை வேலி ஒன்றை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X