2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

Simrith   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு நேற்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் அஜித் கிஹான் ஆகியோர் விஜயம் செய்த போது அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் எட்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் அஜித் கிஹான் ஆகியோர் ஆடைத்தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது கப்பம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

எம்.பி.க்கள் தொழிற்சாலைக்கு வந்தவுடன் அவர்கள் கப்பம் பெற்றதாக குற்றஞ்சாட்டி ஒரு குழுவினர் அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார பகிர்ந்த காணொளி காட்டுகிறது. 

முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலுக்காக தொழிற்சாலைக்கு சென்றிருந்ததாகவும், ஆனால் அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறும் போது ஒரு குழுவினர் தவறாக நடந்து கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தெரிவித்தார். 

"நாடாளுமன்ற உறுப்பினர்" என்ற முத்திரையுடன் கூடிய ஜீப்பை போராட்டக் குழுவினர் மறித்து, மற்றொரு வேனை தாக்குவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகிறது.

தற்போது ஆடைத்தொழிற்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள NPP யுடன் தொடர்புடைய நபர்கள், தற்போதுள்ள குழுவை அகற்றி போக்குவரத்து நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

“பலர் இந்த வாகனங்களை நிதிக் கடன்களின் கீழ் இயக்குகிறார்கள். இந்த குழு அவர்கள் அனைவரையும் அகற்றி அவர்களின் வாகனங்களைப் பெற முயற்சிக்கிறது. இது அவர்களின் அரசாங்கம் என்பதால் நாங்கள் இதைச் செய்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள், அவர்கள் எங்களை வெளியேறச் சொல்கிறார்கள். இதற்கு முன் இவ்வாறான பல கோரிக்கைகளை நாங்கள் ஏற்காததால், அவர்கள் ஆதிக்கம் செலுத்த தொழிற்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்” என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய கப்பம் பெறும் கும்பலை அகற்றுமாறு தம்மிடம் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறிய NPP பிரதிநிதிகள் மேற்குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X