Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 12, புதன்கிழமை
Editorial / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், நாள் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (09) காற்றின் தர சுட்டெண் 64 - 116க்கு இடையில் இருக்கும்.இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிப்பதோடு, காலி, புத்தளம் மற்றும் பதுளையில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது.
பெரும்பாலான சனிக்கிழமை (08) நகரங்களில் காற்றின் தர சுட்டெண் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையிலும், யாழ்ப்பாணம், நுவரெலியா, முல்லைத்தீவு மற்றும் களுத்துறையில் மிதமான அளவிலும் காணப்பட்டது.
நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமானதாக காணப்படும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (S.R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
24 minute ago