2024 ஜூலை 04, வியாழக்கிழமை

ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

Freelancer   / 2024 ஜூலை 02 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் 60 வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவையைப் பாராட்டி கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக நடைபெற்றது.

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்க, 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தில் சேவையில் இணைந்தார். மேலும் 03 ஜூலை 1974 இல் அமைச்சரவை அலுவலகத்தில் மொழி பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

அதன்படி, 2024 ஜூலை 3ஆம் திகதி, அவர் அமைச்சரவை அலுவலகத்தில் 50 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .