2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ஆயுதத்துடன் பாய்ந்த பி.சி: காதலியிடம் விசாரணை

Editorial   / 2025 பெப்ரவரி 14 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடவில் உள்ள ஒரு நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், துபாய்க்குச் செல்வதற்கு முன்பு எஹெலியகொட பகுதியில் நடன ஆசிரியரைச் சந்தித்து, பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நாட்டை விட்டு வெளியேறியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்கிசை பிரிவுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் பிரசன்ன பிராமணரின் அறிவுறுத்தலின் பேரில், கல்கிசை பொலிஸ் தலைமையகத்தால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X