2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

Janu   / 2023 நவம்பர் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.   

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உடுகம வைத்தியசாலையின் ஊழியராக கடமை புரியும் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட தாதி குளியலறையில் ஆடை மாற்றும் போது காணொளி எடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை உடுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .