2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

Freelancer   / 2024 நவம்பர் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

இதன்படி, சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2 ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியமை தொடர்பில், 
வகுப்பு ஆசிரியையுடன் இணைந்து மற்றுமொரு ஆசிரியையினால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களான ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X