2025 ஜனவரி 15, புதன்கிழமை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் பலி

Freelancer   / 2025 ஜனவரி 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, இரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அவனியாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு தடுப்புகள் இடிந்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர், பொலிஸார் இருவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X