2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அலைபேசியால் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு

Freelancer   / 2023 ஜூலை 07 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி  அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார்.

குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின் அலைபேசியை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அதிபரிடம் அகப்பட்டு மாணவி மனவேதனை அடைந்துள்ள நிலையில், இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .