2025 பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை

அலார்ட் ஆகினார் “ஹரக் கட்டா”

Janu   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை “ஸ்கைப்”  காணொளி அழைப்பு ஊடாக மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மனுதாரர்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் சுஜீவ நிஷங்க முன்னிலையில் வியாழக்கிழமை (27) அழைக்கப்பட்ட போது, “ஹரக் கட்டா”  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, “ஹரக் கட்டா” தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை “ஸ்கைப்” காணொளி அழைப்பு ஊடாக மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் சட்டத்தரணி  நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதனை கருத்தில் கொண்ட நீதவான், “ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை “ஸ்கைப்” காணொளி ஊடாக மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மனுதாரர்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .