2024 நவம்பர் 13, புதன்கிழமை

அறுகம்பே பகுதியில் பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 10 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படும் அம்பாறை அறுகம்பே பிரதேசத்தில்,  பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இன்று  கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அங்கு தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்புத் திட்டம் குறித்து மூத்த உள்ளூர் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளரிடம் விளக்கினர்.

பிரதேசத்தின் பாதுகாப்பை மேலும் பேணுவதற்கும், தீவின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையின் பாதுகாப்பு குறித்து அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ஆயுதப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .