2024 நவம்பர் 13, புதன்கிழமை

அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி செய்தி

Freelancer   / 2024 நவம்பர் 09 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜை ஒருவர் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கும், அவரை கண்காணிப்பதற்கும் நியமிக்கப்பட்டதாக பர்ஹாட் ஷகேரி என்ற ஈரானிய பிரஜைக்கு எதிராக அமெரிக்க நீதி திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

இந்த நிலையில், குறித்த ஈரானிய பிரஜை அறுகம்பை பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து பாரிய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்துவதற்கு ஈரானிய புரட்சிகர இராணுவத்தினரால் பணிக்கப்பட்டவர் எனவும் அமெரிக்க நீதி திணைக்களம் குற்றஞ் சுமத்தியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .