Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்ட ஐந்தரை மில்லியன் ரூபாய் வரியை இழக்கும் வகையில், சுங்கத்திற்கு கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படு கைப்பற்றப்பட்ட சொகுசு Mitsubishi Montero ஜீப்பை பறிமுதல் செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, நேற்று (11), சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட GZ 9630 ரக ஜீப் வண்டியே, இவ்வாறு பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
குறித்த வாகனம், பதுளை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வசம் இருந்த போதே கைப்பற்றப்பட்டதாக, ஆணைக்குழு, நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், அரசாங்கத்துக்குப் பல கோடி ரூபாய் வரி மிகுதியை இழந்த இருநூறு கார்களை சுங்கத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, குறித்த கார் கைப்பற்றப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
1 hours ago
2 hours ago