2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

‘அரசியலுக்கு பாடசாலைகளை பயன்படுத்தக் கூடாது‘

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் கலந்துகொண்டனர்.

அதன் அடிப்படையில், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் நுழைவதற்கு தடை உள்ளதா என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இல்லையென்றால், அரசாங்க உறுப்பினர்கள் மட்டும்தான் இவ்வாறு செயல்பட முடியுமா எனவும் வினவினர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .