2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணை

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று (21), பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்” என்று, சபாநாயகர் கூறினார்.

அர்ச்சுனவை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹேமாலி வீரசேகர, விஜித ஹேர்த் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்குவர் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X