2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

அரிசி வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஜனாதிபதி

Freelancer   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். 

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். 

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2 தடவைகள் அரிசி ஆலை உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .