2025 ஜனவரி 08, புதன்கிழமை

அரிசி வாங்க வரிசை; வெறுங்கையுடன் வெளியேறிய மக்கள்

J.A. George   / 2025 ஜனவரி 06 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு இன்று சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டது.

கிலோகிராம் ஒன்று 220 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் அரிசி  வழங்கப்பட்டது.

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று அரிசி வாங்கியதுடன், குறைந்த அளவு அரிசியே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரிசையில் நின்ற பலர், அரிசி தீர்ந்ததால் வெறுங்கையுடன் வெளியேறினர்.

அம்பலாந்தோட்டை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் 265 ரூபாய் வரையில் விற்பனை செய்வதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X