Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 14 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - வனாத்தவில்லு வீதியில் 10ஆவது தூண் பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
அம்பியூலன்ஸ் சாரதியை தவிர, வேறு யாரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பியூலன்ஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து மருத்துவர் ஒருவரை அழைத்துச் சென்று விட்டு, சிகிச்சை முடிந்த பின்னர் அந்த மருத்துவரை மீண்டும் புத்தளம் வைத்தியசாலையில் விட்டுவிட்டு வனாத்தவில்லு நோக்கி சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago