2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அமைச்சர்கள் பறக்க கட்டுப்பாடு

Freelancer   / 2022 மார்ச் 26 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

​​எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படை அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.  
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .