2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

அமைச்சரின் பதவியை சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல்

Simrith   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் எனவும், எனவே அவர் எம்பியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாகச் செயலாளர் ரேணுகா துஷ்யந்த பெரேரா, அமைச்சர் விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான தகுதியை சவாலுக்குட்படுத்தி மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதியின் தலைமை அதிகாரிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், தன்னை அரச அதிகாரியாக மாற்றியுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசு பதவிகளை வகித்து அரசுடன் வேலை ஒப்பந்தம் செய்வதன் மூலம் இந்த நியமனம் அமைச்சர் விஜேபாலவை பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என்று வாதிடுகிறது, மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை நிர்வகிக்கும் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X