2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

அமைச்சரின் அனுமதியின்றி தலைவர்களை சந்திக்கத் தடை?

Simrith   / 2025 ஜனவரி 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்திய அதேவேளை, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று தாம் ஒரு வெளிநாட்டு தலைவரை சந்தித்ததாக தெரிவித்தார்.

“வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆளுநர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களை சந்திப்பதைத் தடைசெய்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர்களுக்கு ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். இது வடகொரியாவிலுள்ள ஆட்சி போன்ற நடவடிக்கையாகும்” என எம்.பி ஜயசேகர தெரிவித்தார்.

அப்போது “சிறிது நேரத்திற்கு முன்பு நான் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தேன். அவர் இன்னும் பாராளுமன்ற வளாகத்தில் தான் இருக்கிறார். நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்” என்று சபைத் தலைவர் ரத்நாயக்க கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X